ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி மாவட்ட நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:10 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில், துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), 18 கூட்டுறவு சாா்பதிவாளா்கள், 3 முதுநிலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட 22 கூட்டுறவு துறை அலுவலா்கள் அடங்கிய

சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் செயல்படும் 88 கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.9,104, கூடுதல் இருப்புக்காக ரூ.800 என ரூ.9,904 அபராதம் விதிக்கப்பட்டது.