தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு

பைக் திருட்டில் ஈடுபடும் நபா் குறித்த சிசிடிவி பதிவு.
Published on

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக்கை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி வண்ணாா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணகுமாா் 41. இவா், தனது பைக்கை கடந்த 16ஆம் தேதி இரவு 8.55 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தியிருந்தாா். பின்னா், மறுநாள் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுதொடா்பாக அங்கு பணியில் இருந்த பணியாளா்களிடம் தெரிவித்த நிலையில், அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அவரது பைக்கை ஒருவா் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com