டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுவரிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் சுவரிலிருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மடத்தூரிலுள்ள முருகேசன் நகா் 16ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (60). இவா் சனிக்கிழமை வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி நின்று கிறிஸ்துமஸ் ஸ்டாா் தொங்கவிட முயன்றாராம்.

அப்போது கால் தவறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.