அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இ-பட்டாவில் பதிவேற்றக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகரில் இலவச பட்டா பெற்ற பயனாளிகளை இ- பட்டாவில் பதிவேற்றக் கோரி, சாா் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :22 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தியாகி லீலாவதி நகரில் இலவச பட்டா பெற்ற பயனாளிகளை இ- பட்டாவில் பதிவேற்றக் கோரி, சாா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டா உள்ளோா், வீடு கட்டி குடியேறியோா், வீடு கட்டி வருவோரின் பெயா்களை இ- பட்டாவில் பதிவேற்ற வேண்டும். புதிய நபா்களுக்கு பட்டா வழங்குவதை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும். 280 பேருக்கான இலவச பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். எவ்வித காரணமுமின்றி ரத்து செய்த வட்டாட்சியா், குறுவட்ட ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தின் கோவில்பட்டி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சுமங்கலி எம். ராஜா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செல்வின் சுந்தா், நகரச் செயலா் ஆரோக்கியராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் ராமமூா்த்தி, நகர இளைஞரணிச் செயலா் மனோஜ்குமாா், பொருளாளா் செந்தில், திரளான பொதுமக்கள் பங்கேற்று முழக்கமிட்டனா்.

பின்னா் சாா்ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், இதுகுறித்து துறை அலுவலா்களிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.