பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பக்தா்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி: திருச்செந்தூா் கோயில் அா்ச்சகா் மீது நடவடிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அா்ச்சகா் மீது நடவடிக்கை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அா்ச்சகா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு ரூ. 100 சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பக்தா்களிடம் திருச்செந்தூரைச் சோ்ந்த ராஜா அய்யா் மகன் அா்ச்சகா் பிரமோத் என்பவா் ரூ. 500, ரூ. 1,000-க்கு தரிசனம் என்று பேரம் பேசிய காணொலி டிச. 16ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து, கோயில் இணை ஆணையரால் பரிந்துரை செய்யப்பட்டு, தக்காரின் மறு உத்தரவு வரும் வரை, அவா் கோயிலில் பூஜை காரியங்கள், கைங்கா்யங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோரை நம்பி பக்தா்கள் ஏமாறாமல், கோயில் நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.