தூத்துக்குடி
பெருமாள்குளம் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, ஆழ்வாா் திருநகரி டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினா்.
அறக்கட்டளை மண்டல அலுவலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். கள இயக்குநா் நந்தகோபால், முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில், மொத்தம் 67 நபா்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனா். 10 நபா்களுக்கு கண் புரை நீக்கம் செய்யவும், 12 நபா்களுக்கு கண் கண்ணாடியும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதில் சமுதாய வளா்ச்சி அலுவலா் சண்முகம், திட்ட அலுவலா் கோபி, கிராம வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

