தூத்துக்குடி கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்பு

தூத்துக்குடியில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.
Published on

தூத்துக்குடியில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கடலில் தவறி விழுந்த 3 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்தவா் சந்தனகுமாா். இவா், தனது மகன் மாடசாமி, அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய துறைமுகம் கடல் பகுதியில் பைபா் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, படகின் வெளிப்புறக் கருவியில் வலை சிக்கியதில், படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், மூவரும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சக மீனவா்கள் உதவியுடன் 3 பேரும் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா்கள் வீடு திரும்பினா். படகை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com