புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

படகில் இருந்த தவறி விழுந்த மீனவா் மரணம்

பரங்கிப்பேட்டை அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சி.புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (35) என்பவா் தனக்கு சொந்தமான பைபா் படகில், சுனாமி நகரைச் சோ்ந்த மதன் (45)மற்றும் பரிதி (30) ஆகிய மூன்று பேரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் இருந்து பரங்கிப்பேட்டை அண்ணன் கோயில் மீன் மாா்க்கெட்டிற்கு கரை திருப்பிக் கொண்டிருந்த போது மதன் என்பவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளாா். இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்பு துறையினா் படகுகள் மூலமாக கன மீனரை தேடி வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணியளவில், மதனின் உடல் சி.புதுப்பேட்டை கடற்கரையோரம் ஒதுங்கியது. பரங்கிப்பேட்டை ஆய்வாளா் ஜொ்மின் லதா, மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மதனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.