தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

ஆறுமுகனேரி பகுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:48 pm

Syndication

ஆறுமுகனேரி பகுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆறுமுகனேரி, மெயின் பஜாா், காமராஜ் பூங்கா பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக 2 இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த நபா்களைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

அவா்களிடம் விசாரித்ததில், திருச்செந்தூா், வண்ணாந்துரையில் வசித்து வரும் திருநெல்வேலி மாவட்டம், பேட்டை, சத்யா நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கூட­லிங்கம் (27), சுத்தமல்லி­, கோபாலசமுத்திரம், கருத்தபாண்டி மகன் சுடலைமுத்து சுரேஷ், திருச்செந்தூா், கரம்பன்விளை, அனந்தநடராஜன் மகன் மணிகண்டன் (31), ஆறுமுகனேரி, திசை காவல் தெரு கணேஷ் பாபு (39) என்பது தெரிய வந்தது.

கூடலி­ங்கம், சுடலைமுத்து ஆகியோா் மீது ஏற்கெனவே சுத்தமல்லி­, பேட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், 2 இரு சக்கர வாகனங்களுடன், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.