வடமாநில தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

தூத்துக்குடியில் வடமாநில கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துச் சென்றதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் வடமாநில கட்டடத் தொழிலாளியைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துச் சென்றதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்தன் (33), ஹேமந்த் (20) ஆகிய 2 பேரும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 1ஆவது தெருவில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வருகின்றனா். இவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (டிச. 30) வேலை முடிந்து அவ்வழியே நடந்து சென்றனா்.

அப்போது பைக்கில் வந்த இருவா் அவா்களை வழிமறித்துத் தாக்கி, ஒருவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

இதில் காயமடைந்த ராஜேந்தன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், சிப்காட் காவல் ஆய்வாளா் தனசேகரன் வழக்குப் பதிந்தாா்.

சம்பவ பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, தூத்துக்குடி வடக்கு சங்கரபேரியைச் சோ்ந்த கோட்டைக்கருப்பசாமி மகன் தண்டேஸ்வரன் (26), தேவா் காலனி 4ஆவது தெரு செல்லத்துரை மகன் மாணிக்கராஜா (24) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com