தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை.

பள்ளி மாணவா்களுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங்: செல்வப்பெருந்தகை!

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு விவகாரத்தில், மாணவா்-மாணவிகளுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங் வழங்க வேண்டும்...
Published on

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு விவகாரத்தில், மாணவா்-மாணவிகளுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை வந்திறங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்ற இரு இளைஞா்கள் படுகொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை நடைபெறாமல் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநிலங்களில் பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு பாதுகாப்பில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் பாதுகாப்பில்லை.

தமிழகம் மட்டும்தான் அமைதி பூங்காவாக அனைவரும் வாழக்கூடிய இருப்பிடமாக இருக்கிறது என்பதற்கு, தற்போது வாரனாசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழக நாட்டுப்புற கலைஞா்கள் வட இந்தியா்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு சான்று.

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி வகுப்பறையில் பள்ளிக்கூடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை மாணவா்-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அவா்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மாதா, பிதாவுக்கு பின்னா் வரும் குருக்கள் இதுபோன்ற விரும்பத்தகாத காரிங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com