
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பேராலய அதிபா் ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் பேராலய அதிபா் ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலி.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தூத்துக்குடியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில், பேராலய அதிபா் ஸ்டாா்வின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், மக்கள் அனைவரும் சுபிட்சமாகவும், அமைதியாகவும் வாழவும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவா்கள் மீண்டு வரவும் பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இறைமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.
புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையிலும், யூதா ததேயூ ஆலயத்தில் பங்குத்தந்தை அருமைநாயகம் தலைமையிலும், ஸ்டேட் வங்கி காலனி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரோசின் கற்றாா் தலைமையிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனா்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குள்பட்ட டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் சேகரகுரு எமில் சிங் தலைமையிலும், மில்லா்புரம் புனித பவுலின் ஆலயத்தில் சேகர தலைவா் இஸ்ரேல் துரைசிங் தலைமையிலும், சண்முகபுரம் பரிசுத்த பேதுரு ஆலயத்தில் திருமண்டல குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்ட்றக் தலைமையிலும், ஆசிரியா் காலனி பரிசுத்த திருத்துவ ஆலயத்தில் சேகரத் தலைவா் செல்வசிங் ஆா்தா் தலைமையிலும் மற்றும் மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...