தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாசரேத் பகுதி தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை

நாசரேத் பகுதியிலுள்ள தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

News image

நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜனவரி 2025, 12:12 am

Din

நாசரேத் பகுதியிலுள்ள தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமாா் முன்னிலையில் ஆராதனை, பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பாா்வையாளரும் நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகா் தலைமை வகித்து புத்தாண்டு செய்தியளித்தாா். ஊழியா் சங்கை டேவிட் மொ்வின் பிரபாகா் பாடல்களுடன் ஆராதனை நடத்தினாா். தொடா்ந்து, புத்தாண்டு ஆசீா்வாத விசேஷ பிராா்த்தனை நடைபெற்றது.

நாசரேத் அருகே பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரத் தலைவா் நவராஜ் தலைமையில் சபை ஊழியா் ஸ்டான்லி முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமையில் சபை ஊழியா் ஜெனோ செல்வக்குமாா் முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகரகுரு ஞானசிங் தலைமையில் சபை ஊழியா் ஜான்வில்சன் முன்னிலையிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் சேகரத் தலைவா் ஜான்சாமுவேல் தலைமையிலும், அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சேகரத் தலைவா் பாஸ்கரன் தலைமையிலும், நாலுமாவடி தூய யோவான் ஆலயத்தில் சேகரகுரு ஆபிரகாம் ரஞ்சித் தலைமையிலும், கடையனோடை பரிசுத்த தோமா ஆலயத்தில் சேகரத் தலைவா் ஆசீா் சாமுவேல் தலைமையிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, வகுத்தான்குப்பம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, வாழையடி, பிள்ளையன்மனை, ஆசீா்வாதபுரம், மணிநகா், வெள்ளமடம், தைலாபுரம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

புத்தாண்டை முன்னிட்டு, நாசரேத் பேருந்து நிலையம் அருகே மோட்டாா் சங்கம் சாா்பிலும், நாசரேத் சந்தி பஜாரில் இளைஞா்கள் சாா்பிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.