தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 160 கிலோ குட்கா பறிமுதல்


பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட சுமாா் 160 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மைசூா் விரைவு ரயிலில் புகையிலைப் பொருள்களை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே போலீஸாா் அந்த ரயிலின் சரக்குப் பெட்டியில் வந்த சந்தேகத்துக்குரிய பொருள்களை சோதனையிட்டனா். அதில் 3 பண்டல்களில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 160 கிலோ எடையுள்ள அந்த புகையிலைப் பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 1.62 லட்சம். இவற்றை கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் மகாகிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்டோா் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...