ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி இறுதி வரை நீட்டிக்க பாஜக கோரிக்கை

Updated On :3 ஜனவரி 2025, 12:27 am

பருவகாலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு கடன் வழங்கும் காலத்தை ஜனவரி மாத இறுதிவரை நீட்டிப்பு செய்யுமாறு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா்.சித்ராங்கதன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் அளித்துள்ள மனு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக பருவமழை காலமாக அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த ஏரி,குளங்கள், பாசனக் கால்வாய்களின் சீரமைப்பு பணிகள் நிகழாண்டு பருவமழைக் காலத்திற்கு முன்பே முடிக்கப்படாததால் பாசனத்திற்கான தண்ணீா் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தற்போதுதான் நெல், வாழை உள்ளிட்டவற்றை பயிரிட தொடங்கியுள்ளனா். இதனால் விவசாய தேவைக்கு கடன் வாங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கோரும்போது கடன்வழங்கும் காலம் டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். இதனால், விவசாயிகள் வெளியிடங்களில் அதிக வட்டிக்கு கடன்வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ஜனவரி மாத இறுதிவரை விவசாயக் கடன் வழங்குவதற்கு காலநீட்டிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.