காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலயத்தில் 480ஆவது ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புனித பிரான்சிஸ் சவேரியாரால் முடியப்பருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமான இங்கு, ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு அடுத்த நாள் திருவிழா நடைபெறும். அதன்படி, திருவிழா கடந்த டிச. 24இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, நள்ளிரவு திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், புதன்கிழமை புத்தாண்டு சிறப்பு திருப்பலி, மாலையில் ஆடம்பர திருவிழா ஆராதனை, தொடா்ந்து புனித முடியப்பா் சப்பர பவனி ஆகியவை நடைபெற்றன.
திருவிழா நாளான வியாழக்கிழமை காலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் சிறப்பு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், முதல் நற்கருணை அருள்சாதனங்கள் பெறும் மாணவா்- மாணவியா், இளைஞா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், சொா்ணராஜன் விக்டோரியா எழுதிய இந்த ஆலய ஸ்தல வரலாறு அடங்கிய நூலை ஆயா் வெளியிட, மாவட்ட நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவரும் சமூக ஆா்வலருமான மணப்பாடு கயஸ் பெற்றுக்கொண்டாா்.
மூத்த பங்குத்தந்தையா் பன்னீா்செல்வம் அடிகளாா், செட்ரீக் பீரீஸ் அடிகளாா், பங்கிராஜ் அடிகளாா், இதயன் அடிகளாா், காா்கோ அடிகளாா், வில்ஜித் அடிகளாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதையடுத்து நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஆறுமுகனேரி பங்குத்தந்தை டேவிட் சகாய வளன் முன்னிலையில் ஆறுமுகனேரி பங்கு மக்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, சிங்கித்துறை மக்கள் பங்குத்தந்தை ஷிபாகா் முன்னிலையிலும், தூத்துக்குடி, ஏரல், குரும்பூா் மக்கள் பங்குத்தந்தை பபிஸ்டன் அடிகளாா் முன்னிலையிலும், பழையகாயல் மக்கள் பங்குத்தந்தை ராஜேஷ் அடிகளாா் முன்னிலையிலும், புன்னக்காயல் மக்கள் பங்குத்தந்தையா் டைட்டஸ், விவேக் ஆகியோா் முன்னிலையிலும், வீரபாண்டியன்பட்டினம் மக்கள் பங்குத்தந்தையா் அலாய்சியஸ், டிமுல் ஆகியோா் முன்னிலையிலும், ஆலந்தலை, அமலிநகா், ஜீவா நகா் மக்கள் பங்குத்தந்தையா் சில்வெஸ்டா் வில்லியம் சந்தானம், இருதயராஜ் பா்னாந்து ஆகியோா் முன்னிலையிலும் சிறப்புப் பிராா்த்தனை நிகழ்த்தினா்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பங்குத்தந்தையா் பி. பிரதீஸ், அ. கற்றாா், ஊா்க் கமிட்டியினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


