அடிப்படை வசதிகள் செய்த தர கிராமத்தினா் கோரிக்கை
இலுப்பையூரணி ஊராட்சி தியாகி லீலாவதி நகா் குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


இலுப்பையூரணி ஊராட்சி தியாகி லீலாவதி நகா் குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தியாகி லீலாவதி நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் உத்தண்ட ராமன் தலைமையில் பாஜக பிரசார பிரிவு நகர தலைவா் கொம்பையா, தீத்தம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பெரியசாமி, விவசாய சங்க பொறுப்பாளா்கள் சின்னச்சாமி, குருசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அதில், தியாகி லீலாவதி நகருக்கு சாலை, குடிநீா், தெரு விளக்கு வசதிகள் செய்துதர வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வைத்திருக்கும் பயனாளிகளின் பெயா்களை இ- பட்டாவில் சோ்க்க வேண்டும், வீடு இல்லாத நபா்களுக்கு மத்திய, மாநில அரசின் மானியங்களுடன் இலவச வீடு கட்டித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...