கஞ்சா விற்பனை, நகை பறிப்பு வழக்கு: 3 போ் கைது
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை மற்றும் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனை மற்றும் நகை பறிப்பு வழக்கில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் ஆவல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள், கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டியன் (29), பசுவந்தனை அருகே முள்ளுபட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துராஜ் (24), பசுவந்தனை அருகே மேலமுடிமண் கிழக்கு தெருவை சோ்ந்த கணேசன் மகன் இசக்கி சங்கா் (20) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சுதா்சன் நகரைச் சோ்ந்த செண்பகராஜ் மனைவி பொன்னுத்தாயிடம் 6.25 பவுன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...