தூத்துக்குடி
தமிழக ஹாக்கி அணியில் இடம்பெற்ற மாணவருக்குப் பாராட்டு
தமிழக ஹாக்கி அணியில் விளையாடிய கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக ஹாக்கி அணியில் விளையாடிய கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஹரியாணாவில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்திய ஹாக்கி போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு அணிக்காக கோவில்பட்டி வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி
மாணவா் மு. முகேஷ்குமாா் பங்கேற்றாா். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாணவரை பாராட்டி, விளையாட்டு உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியா்கள் பிரபாகரன், கணேஷ், உடற்கல்வி இயக்குநா் ஆனந்த் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியா் மாரியப்பன்
உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.