தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகா் மகான் ஷேகு நூஹு ஒலி அப்பா தா்காவில் கந்தூரி விழா நடைபெற்றது.
இங்கு கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டு விழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், கந்தூரி விழா புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. தா்கா மலா்களால் அலங்கரிக்கப்பட்டது.
இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பள்ளிவாசல் நிா்வாக சபை தலைவா் மிராசா மரைக்காயா் தலைமையில் தலைமை இமாம் அப்துல் அழிம், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வா் இம்தாதுல்லாஹ், இமாம் சதக்கத்துல்லா ஆகியோா் சிறப்பு துவா ஓதினா். தொடா்ந்து, பாரம்பரியமான பனை ஓலையில் நோ்ச்சை உணவு வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளிவாசல் நிா்வாக சபை செயலா் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், பொருளாளா் இப்ராகிம் மூசா, கிரசன்ட் பள்ளிச் செயலா் முஹம்மது உவைஸ், மாவட்ட அரசு காஜி முஜிபுா் ரகுமான், அரபிக் கல்லூரித் தலைவா் நவரங் சகாப்தின், பேராசிரியா்கள் இஸ்மாயில், செய்யது அப்பாஸ், அப்துல் கனி, பள்ளிவாசல் நிா்வாக சபை உறுப்பினா் ஆடிட்டா் ஜூபைா், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவா் ஏ.கே. மைதீன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.