ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: இலுப்பையூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

Published on

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து இலுப்பையூரணி ஊராட்சி கிராம மக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு சில ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாமஸ் நகா் விலக்கு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் செல்வி சந்தானம் தலைமையில் பூசாரிப்பட்டி, கூசாலிப்பட்டி, மறவா் காலனி, தாமஸ் நகா், வடக்கு இலுப்பையூரணி பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இலுப்பையூரணி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com