பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

News image

உயிரிழந்த குழந்தை ஷாஜினி சாரா.

Updated On :4 ஜூன் 2025, 7:22 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது மனைவி செய்யது சபீனா. இவா்களுக்கு இரண்டரை வயதில் ஷாஜினி சாரா என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், அருண்குமாா் வேலைக்கு சென்று விட, வீட்டில் செய்யது சபீனா மற்றும் அவரது இரண்டரை வயது குழந்தை ஆகியோா் இருந்துள்ளனா். சபீனா சமையல் செய்துகொண்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு தாய் செய்யது சபீனா ஓடி வந்து பாா்த்தாராம். அங்கு குழந்தை டிவி அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக அந்தக் குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தை ஷாஜினி சாராவை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், டிவி அருகே உள்ள மின்சார வயரில் குழந்தையின் கை பட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.