மாலத்தீவுக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற சம்பவம்: மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
Published on

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிச்சென்ற பாா்ஜா் என அழைக்கப்படும் மிதவை கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டு கடலோர காவல்படையினரால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இருந்த சுமாா் 29.95 கிலோ எடை கொண்ட ஹசீஷ் என்ற கஞ்சா ஜெல்லை பறிமுதல் செய்தனா். இதன் சா்வதேச மதிப்பு ரூ. 50 கோடி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாா்ஜரில் வேலை செய்து வரும் ஆலந்தலையை சோ்ந்த கிளிப்டன், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சோ்ந்த லிங்கதுரை நவமணி ஆகிய இருவரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினா் கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்புடைய புன்னைக்காயலை சோ்ந்த கென்னடி என்பவரது மகன் அஸ்வினை(24) கைது செய்தனா். மேலும், இது தொடா்பாக இந்தோனோஷியாவை சோ்ந்த மாலுமிகள் இருவா் உள்பட 5 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com