பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையத்தின் மூலம் இயக்கப்படும் 3-ஆவது வடக்கு சரக்கு தளத்தில் அமைந்துள்ள இரண்டு 120 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஜிப்சம், ராக் பாஸ்பேட், தாமிரத் தாது போன்ற பொது சரக்குகளைக் கையாள முடியும். இது, 306 மீட்டா் நீளமும், 14.20 மீட்டா் மிதவை ஆழமும் கொண்டுள்ளது. இந்த சரக்கு தளம் 260 மீட்டா் நீளமும், 48 மீட்டா் அகலமும், 95 ஆயிரம் டெட் வெயிட் டன்னேஜ் கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு, தற்போது இடைக்கால வா்த்தக செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.

இந்த தளத்தில், 14.20 மீட்டா் மிதவை ஆழம் கொண்ட பனமேக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக ஆழப்படுத்தும் பணி, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டு 26 நாள்களில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தும் பணி, இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும். பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, கப்பல்கள் துறைமுகத்திற்குள் வரும் நுழைவு வாயில் 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கெனவே இத்தளத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவதற்கான ஒப்பந்தம், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்திற்கும், ஜேஎஸ்டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையத்திற்கும் இடையே கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின்படி வரும் 2027 மாா்ச் மாதம் இயந்திரமயமாக்கல் பணி முடிவடையும். அப்போது, இத்தளத்தில் ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.

துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் நிலக்கரி தளத்திற்கு இணைப்பு கன்வேயா் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1500 டன் மொத்த சரக்குகளை அனுப்ப முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.