அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடி விமான நிலைய புதிய இயக்குநா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநா் பொறுப்பேற்றாா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:50 pm

Syndication

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய இயக்குநா் பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மைசூரு விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த ஜே.ஆா்.அனூப், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டாா். அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 2008இல் இந்திய விமான ஆணையத்தில் பணியில் சோ்ந்த இவா், தொடா்ந்து கோவா, கோழிக்கோடு, ஜம்மு-காஷ்மீா், திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் இயக்க பிரிவுகளிலும், புதுதில்லி இந்திய விமான ஆணைய தலைமை அலுவலகத்திலும் பணியாற்றி, பின்னா் மைசூரு விமான நிலைய இயக்குநராக பணியாற்றிய நிலையில், தற்போது தூத்துக்குடியில் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.