டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நவ. 10இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கு கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (நவ. 10) தொடங்குகிறது.
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கு கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (நவ. 10) தொடங்குகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழக அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆா்பி, டிஆா்பி போன்ற போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 645 காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2-ஏ முதல்நிலை தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, முதல்நிலை தோ்வு கடந்த செப். 28ஆம் தேதி நடத்தப்ட்டது.

இத்தோ்வு எழுதி முதன்மைத் தோ்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தோ்வா்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக, முதன்மைத் தோ்விற்கான ஒருங்கிணைந்த இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோரம்பள்ளத்தில் வரும் திங்கள்கிழமை (நவ. 10) காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடைபெறும். போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் பட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண் உம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற் ஞச்ச்ண்ஸ்ரீங் என்ற பங்ப்ங்ஞ்ழ்ஹம் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள எா்ா்ஞ்ப்ங் படிவத்தை பூா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 0461-2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்தோ பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com