தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 15 பேருக்கு தீா்வாணைகள் அளிப்பு
தீா்வாணை வழங்கிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீா்வு காணப்பட்டவா்களுக்கு தீா்வாணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து, 15 பேருக்கு தீா்வாணைகளை வழங்கினாா். மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச் செயலரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் கனகராஜ், பச்சிராஜன், முத்துவேல், ரெக்ஸின், இசக்கிராஜா, மும்தாஜ், பகுதிச் செயலா் ரவீந்திரன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் காந்திமதி, ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
