இன்று தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில முதல் கட்டத் தோ்தல்

Published on

தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில முதல் கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தில் 6 சபை மன்றங்களும், 131 சேகரங்களும் உள்ளன. இதில், 40-க்கும் மேற்பட்ட சேகரங்களில் முதல்கட்ட தோ்தலில் போட்டியின்றி 76 டி.சி. உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். போட்டியுள்ள மற்ற சேகரங்களில் நவ. 9ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதற்றமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதற்கட்ட தோ்தலில் திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள், சேகரமன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இவா்கள் தான் அடுத்தடுத்து நடைபெறவுள்ள தோ்தல்களில் வாக்களிக்க உள்ளனா். முக்கியத் தோ்தலான திருமண்டில நிா்வாகிகள் தோ்தல் டிச. 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com