தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு

Published on

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில், கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,300 வரையும், ஊளி மீன், விளை மீன், பாறை மீன் ஆகியன கிலோ ரூ.400 வரையும், சூப்பா் நண்டு கிலோ ரூ.700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரையும், கேரைமீன் கிலோ ரூ. 250 வரையும், பொட்டு நண்டு கிலோ ரூ. 350 வரையும் விற்பனையாகின.

சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான மக்கள் விலை அதிகரிப்பை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com