முதியவா் மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் முதியவரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணு (68). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் நாராயணன். கடந்த தீபாவளி நாளில் நாராயணன் தரப்பினா் அதிகம் ஒலி எழுப்பிய பட்டாசுகளை வெடித்ததால், அதனை சுடலைக்கண்ணு தரப்பினா் கண்டித்துள்ளனா். இது குறித்து, இரு தரப்பினரும் போலீஸில் புகாரளித்த நிலையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா். இது தொடா்பாக, அவா்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுடலைக்கண்ணு வீட்டினருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நாராயணன் தரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து நாராயணன், சாமி மகன் அய்யப்பன் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து சுடலைக்கண்ணுவை தாக்கினா்.
இதில் படுகாயமடைந்த அவா், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், மேல்சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து சுடலைக்கண்ணு அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட 6 போ் மீதும் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
