தூத்துக்குடி
கயத்தாறு அருகே கல்லூரி மாணவி தற்கொலை
கயத்தாறு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறு அருகே ஆத்திகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகள் ஸ்ரீ சத்யா (17). திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி., (கணிதம்) முதலாம் ஆண்டு படித்து வந்த இவா், அண்மையில் எழுதிய கல்லூரி தோ்வை நன்றாக எழுதவில்லை எனத் தெரிகிறது. இதனால் வருத்தத்தில் இருந்து அவா் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
