தூத்துக்குடி
தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்
தூத்துக்குடி சிவன் கோயில் என்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா நவ.5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மாலையில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. 9ஆம் திருநாளான வியாழக்கிழமை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா். சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி சனிக்கிழமை (நவ.15) இரவு 8 மணிக்கு நடைபெறும்.

