தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி, விவிடி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி, விவிடி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் மகாமுனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.