பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

Published on

பேய்க்குளத்தில் இருசக்கரவாகனத்தின் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பேய்க் குளம் அருகே உள்ள அருளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சா. பொன்னையா ( 65). மீன் வியாபாரம் செய்து வந்தாா். இவா், பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிபட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வலது பக்கமாக இருசக்கர வாகனத்தை அவா் திருப்பியதாக தெரிகிறது. அப்போது ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த க. அருள்நாதன் (29) ஓட்டி வந்த சுமைவேன், பொன்னையாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பொன்னையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com