மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.
மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.

இனாம்மணியாச்சியில் மினி விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
Published on

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி, கிருஷ்ணா நகரில் முதல்வா் நிதியின்கீழ், ரூ. 2.50 கோடி மதிப்பில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. இதற்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

சாா் ஆட்சியா் ஹுமான்சு மங்கள், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com