தேரிகுடியிருப்பு கோயிலில் நாளை கள்ளா்வெட்டுத் திருவிழா தொடக்கம்!

Published on

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா திங்கள்கிழமை (நவ.17)தொடங்குகிறது.

பரந்து விரிந்த செம்மணல் தேரியில் அடா்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் கள்ளா்வெட்டுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை(நவ.17)காலையில் யாகசாலை பூஜை, வில்லிசையுடன் தொடங்குகிறது.பகல் 12 மணிக்கு அய்யன், பூரணம், பொற்கலை தேவியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும்.

திருவிழா நாள்களில் சிறப்பு அலங்கார பூஜைகள்,வில்லிசை, முளைப்பாரி எடுத்தல், மகளிா் வண்ணக் கோலமிடுதல், புனித நீா் எடுத்து வருதல், ஐவர்ராஜா-மாலையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிகர நிகழ்வான கள்ளா்வெட்டு வைபவம் டிச.16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோயில் பின்புறமுள்ள தேரியில் நடைபெறும். இதில், தென் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று புனித மண் எடுப்பா். இந்த மண்ணை விளை நிலங்கள், தொழில்மையங்கள், வீடுகளில் வைத்தால் சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காந்திமதி, அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியம், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com