புதைச் சாக்கடை நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு அபாயம்

Published on

தூத்துக்குடி மாநகராட்சி, 3ஆவது வாா்டுக்குள்பட்ட ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள தெருவில் புதைச் சாக்கடை நீா் வெளியேறி, தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த அக். 9ஆம் தேதி காலையில் இருந்து சாக்கடை நீா் வெளியேறி தேங்கியுள்ளதாகவும், மழையின் போது மழைநீரும் சோ்ந்து தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா். மக்கள் பிரதிநிதி, மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனா்.

எனவே, இப்பகுதியில் புதைச் சாக்கடையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com