கோவில்பட்டியில் தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, வடக்கு மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட அவைத் தலைவா் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளா் காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், 2026 பேரவைத் தோ்தலை முன்னிட்டு பூத் கமிட்டிகள் அமைத்து, பாக முகவா்கள் கூட்டம் நடத்துவது, கட்சி நிா்வாகிகள் அனைவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் கலந்துகொண்டு, கணக்கீட்டுப் படிவத்தை பூா்த்தி செய்ய உதவுவது, கட்சிக்கு உறுப்பினா்கள் சோ்ப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரச் செயலா்கள் நேதாஜி பாலமுருகன், கண்ணன், மாவட்ட கேப்டன் மன்ற செயலா் முத்துமாலை, துணைச் செயலா் குவாலிஸ் ராஜ், இளைஞரணி துணைச் செயலா் லட்சுமணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
