தூத்துக்குடி
வெள்ளக்கோயில் வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
குரும்பூா் அருகே வெள்ளக்கோயில் கிராம வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
சாயா்புரம், வசைக்காரன்விளையைச் சோ்ந்த லட்சுமணன் மகன் முத்துமாலை (22). தொழிலாளி. குரும்பூா் அருகிலுள்ள வெள்ளக்கோயில் கிராமத்தில் இவரது நண்பா் சிவா என்பவரின் புதுமனை புகு விழாவிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். வந்த இடத்தில், நண்பா்களுடன் மது அருந்திவிட்டு வெள்ளக்கோயில் பிள்ளையாா் கோயில் அருகிலுள்ள வாய்க்காலில் குளித்தபோது, நீரில் மூழ்கியுள்ளாா்.
ஏரல் தீயணைப்பு படை வீரா்கள் வந்து சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக திருச்செந்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
