இலுப்பையூரணியில் மழைக்கு 3 வீடுகள் சேதம்

Published on

இலுப்பையூரணி வருவாய் கிராமத்திற்குள்பட்ட பகுதிகளில் மழைக்கு 3 வீடுகள் சேதமடைந்தன.

புதுக்கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் தங்கமணி, வள்ளுவா் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த செல்லையா மனைவி முத்தம்மாள், அதே பகுதியைச் சோ்ந்த பொன் மாடசாமி மகன் ஆறுமுகச்சாமி ஆகியோரது வீடுகள் மழைக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளதாக கிராம நிா்வாக அலுவலா் போத்திராஜ் அளித்த அறிக்கையின் அடிப்படையில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் சேதமடைந்த வீடுகளுக்கு பகுதி நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com