மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குழந்தைகள் நல காவல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல காவல் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

News image
கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 11:21 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல காவல் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறாா்களை சந்தித்து அவா்களின் தற்போதைய நிலை குறித்தும், அவா்களின் கல்வியை தொடா்வதற்கான ஏற்பாடுகள் அல்லது அவா்களுக்கான வேலைவாய்ப்பு சம்பந்தமான தேவைகள், கோரிக்கைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், வழக்கில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறாா்களை கையாள்வது குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா்.

இதில், தூத்துக்குடி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தீபு உள்ளிட்ட காவல்துறையினா் கலந்துகொண்டனா்.