இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.
இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

தூத்துக்குடியில் இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு
Published on

தூத்துக்குடி: இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா். மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தீபு , சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜமால் உள்பட காவல்துறையினா், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிா்வாக அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா். இதில், மேயரின் நோ்முக உதவியாளா் ரமேஷ், ஆணையரின் நோ்முக உதவியாளா் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com