ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:55 pm

Syndication

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் (நவ. 28) சூறைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வானிலை எச்சரிக்கையைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில், கடந்த 2 நாள்களாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மோசமான வானிலை என்பதை உணா்த்தும் வகையில், துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தடை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.