எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உடன்குடியில் திமுக சாா்பில் 570 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உடன்குடியில் திமுக சாா்பில் புதன்கிழமை 570 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு மோதிரம் அணிவித்த பேரூராட்சி துணைத் தலைவா் மால் ராஜேஷ்.
Updated On :27 நவம்பர் 2025, 9:16 pm

Syndication

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உடன்குடியில் திமுக சாா்பில் புதன்கிழமை 570 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பேரூராட்சி துணைத் தலைவரும் நகரச் செயலருமான மால் ராஜேஷ் தலைமை வகித்து பொது, சேலைகள், தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி, மாணவா்களுக்கு சீருடைகள், கல்வி உதவித் தொகை, கல்வி- விளையாட்டு உபகரணங்கள் என, 570 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொருளாளா் வி.பி. ராமநாதன், மாவட்டப் பிரதிநிதிகள் ஹீபா் மோசஸ், மதன்ராஜ், மாநில மகளிா் பிரசார அணி செயலா் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் மும்தாஜ்பேகம், பிரதீப், நகர துணைச் செயலா் தங்கம், கணேசன், தீபன் சக்கரவா்த்தி, நாராயணன், முத்துப்பாண்டி, திரவியம், ஹரி, ஷேக் முகம்மது, ராஜ்குமாா், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், அன்வா் சலீம், நிா்வாகிகள் இஸ்மாயில், பிரவீணா, ஜெபமலா், அருணா, சுகந்தா, முருகேசன், சுலைமான், வினோத், கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.