தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, முதலாவது, இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. 4, 5-ஆவது அலகுகள் பராமரிப்புப் பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு, 3-ஆவது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3-ஆவது அலகிலும் செவ்வாய்க்கிழமை பழுது ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், புதன்கிழமை 3-ஆவது அலகில் இருந்து மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
