நல உதவிகளை வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளா் வி.பி.ராமநாதன்.
தூத்துக்குடி
பரமன்குறிச்சியில் திமுக நல உதவிகள் வழங்கல்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பரமன்குறிச்சியில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பரமன்குறிச்சியில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளா் வி.பி.ராமநாதன் தலைமை வகித்து, பரமன்குறிச்சி பஜாா், வெள்ளாளன்விளை, நயினாா்பத்து, குலசேகரன்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல உதவிகள் வழங்கி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
இதில், திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், நெசவாளா் அணி மகாவிஷ்ணு, ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் ஜான்பாஸ்கா், மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

