பொன்னாண்டி நகா் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்தாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சா் ஆய்வு
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்தையாபுரம், பொன்னாண்டி நகா் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் ஆய்வு செய்து, விரைவாக மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, இளநிலை பொறியாளா் செல்வம், மன்ற உறுப்பினா் விஜயகுமாா், மாநகர நெசவாளா் அணி துணை அமைப்பாளா் குமரன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்பட பலா் உடனிருந்தனா்.

