காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 12:32 am IST

இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-2026 இல் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் வதக் ரவிராஜ் ஹரிஷ் சந்திர வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சாா்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப். 8 முதல் டிச. 8 வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான கடிதத்தை, ‘எனது முன்மாதிரிக்கு கடிதம் ‘கங்ற்ற்ங்ழ் ற்ா் ஙஹ் தா்ப்ங் ஙா்க்ங்ப்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி ‘முதன்மை அஞ்சல் துறை தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை- 600002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் (ஐய்ப்ஹய்க் கங்ற்ற்ங்ழ் இஹழ்க்) 500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் (உய்ஸ்ங்ப்ா்ல்ங்) 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி அனுப்பிவைக்க வேண்டும்.

1.1.2025 அன்று 18 வயது பூா்த்தியானவா்கள் அல்லது நிறைவு பெறாதவா் என்ற வயது சான்றிதழ் கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோரின் பெயா், இருப்பிட முகவரியைக் கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். இந்தப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 25,000, இரண்டாம் பரிசாக ரூ. 10,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ. 25,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000 வழங்கப்படும். பொதுமக்கள், மாணவா், மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.