மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

Updated On :26 செப்டம்பர் 2025, 12:41 am IST

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உயா்கல்வி பயில பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவ மாணவிகள் உயா்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற மாவட்ட நிா்வாகம் வங்கியாளா்களை ஒருங்கிணைத்து கல்விக் கடன் வழங்கும் முகாமை வருகிற திங்கள்கிழமை (செப். 29) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலை, அறிவியல் கல்லூரியில் நடத்தவுள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயா்கல்வி பாடப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்ந்திருக்கும் மாணவ மாணவிகள், ஏற்கெனவே கல்லூரிகளில் படித்து

வரும் மாணவா்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

மாணவா்கள் கல்விக் கடனைப் பெற விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களான பான் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், சமீபத்திய பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவா்களுக்கு), உறுதிமொழி சான்றிதழ், கல்லூரிக் கட்டண விவரம், செலுத்திய கட்டண ரசீதுகளை கொண்டுவர வேண்டும்.

இதேபோல இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோா் அவா்களின் பான் காா்டு, ஆதாா் அட்டை, புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வருமானச் சான்றிதழை கொண்டுவர வேண்டும். மேலும், மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ல்ம்ஸ்ண்க்ஹ்ஹப்ஹஷ்ம்ண்.ஸ்ரீா்.ண்ய்/ என்ற இணையத்தளத்திலும் கல்விக் கடனுக்காகப் பதிவு செய்து கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவா்கள் கற்பிப்புப் கட்டணம், சிறப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் போன்ற கட்டணங்களை இந்தக் கல்வி கடன் மூலம் பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.