அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 போ் மனுக்கள் அளிப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 12:39 am IST

காமநாயக்கன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 569 மனுக்கள் பெறப்பட்டன.

காமநாயக்கன்பட்டி, அசானக்கூடம் மண்டபத்தில், அச்சங்குளம், நாயக்கன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, முடுக்கலாங்குளம் ஆகிய பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் 18 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 46 சேவைகளின் கீழ் மகளிா் உரிமை துறை விண்ணப்பங்கள் 278, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்ந்த விண்ணப்பங்கள் 216 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 569 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் உதவி திட்ட அலுவலா் ஸ்ரீனிவாச சுடலைமுத்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலபதி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவராமகிருஷ்ணன், நிஷா, லலிதா, பத்மா, கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அய்யனேரியில்...

அய்யனேரி கிராமத்தில் உள்ள கம்மவாா் திருமண மண்டபத்தில் அய்யனேரி, சித்திரம்பட்டி ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா ஈஸ்வரன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். இந்த முகாமில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிமன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.